நடிகர் விஜய் சினிமாவில் இருந்து 2_-3 ஆண்டுகள் ஓய்வு எடுக்க இருப்பதாக திடீரென சினிமா வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது.
ஜூன் 22ஆம் திகதி விஜய் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் வெங்கட் பிரபு படத்தில் நடித்து முடித்த பிறகு மூன்று வருடங்கள் விஜய் எந்தப் படத்திலும் நடிக்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
அரசியல் ஆசையில் இருக்கும் விஜய் அதற்கான முதல் படியாக கடந்த மாதம் 234 தொகுதிளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று பேரை சந்தித்து ஊக்கத்தொகையையும், சான்றிதழையும் வழங்கினார்.
அவரது இந்தச் செயற்பாடுகளுக்கும், விஜய் மக்கள் இயக்கம் செய்யும் பிற நலத்திட்ட உதவிகளுக்கும் மக்கள் மத்தியில் மதிப்பு ஏறிக்கொண்டிருக்கிறது.
எனவே இப்போதிலிருந்து உழைத்தால்தான் 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கி குறிப்பிடத்தகுந்த பெயரை பெற முடியும் என விஜய் நினைப்பதாகவும் அதனால் மூன்று வருடங்கள் சினிமாவுக்கு தற்காலிகமாக விடைகொடுக்கலாம் என்ற முடிவில் அவர் இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Add new comment