- அமெரிக்காவில் இந்திய பிரதமர்
'திறமையும் தொழில்நுட்பமும் ஒன்றிணைவது ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான விஜயத்தின் போது அமெரிக்க மற்றும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களது பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர்களை அமெரிக்க ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அச்சமயமே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சத்யா நாதெல்லா, கூகுள் நிறுவன பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சுந்தர் பிச்சை, நாசா நிறுவனத்தின் விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளரான முகேஷ் அம்பானி, செரோடா மற்றும் ட்ரூ பீகன் இணை நிறுவுனர்களான நிகில் காமத், பிருந்தா கபூர் உட்பட அமெரிக்காவின் மேலும் பல முன்னணி நிறுவனங்களது அதிகாரிகளும் இச்சந்திப்பில் பங்குபற்றியுள்ளனர்.
இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, 'இந்திய - அமெரிக்க ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களுக்கும் மாத்திரமல்லாமல் முழு உலகிற்குமே முக்கியமானது. இக்கூட்டாண்மையானது அடுத்த முன்னேற்றம் அல்லது அடுத்த ஒப்பந்தத்தை விடவும் பாரியது. காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கும், பிரபஞ்சத்தை ஆராய்வதற்கும், மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கும், தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் எமது குடிமக்களுக்கு உண்மையான வாய்ப்பை வழங்குவதற்கும் இது அவசியமானது'என்றுள்ளார்.
Add new comment