- போதைப் பொருள் வாங்க பணம் கொடுக்காததால் விபரீதம்
தனது மனைவியை தீ வைத்து எரித்த சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் யாழ்ப்பாணம் மூலவெட்டி பகுதியில் நேற்றைய தினம் (25) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் போதைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்க பணம் கேட்ட போது மனைவி கொடுக்க மறுத்ததால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறித்த பெண்ணின் ஆடைகள் தீ பிடித்ததையடுத்து அயலவர்கள் தீயை அணைத்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment