இன்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் 60 வகையான மருந்துகளின் விலையை 16% இனால் குறைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இது தொடர்பில் கடந்த ஜூன் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, எந்தவொரு மருந்து உற்பத்தியாளர், இறக்குமதியாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும் குறித்த உச்சபட்ச விலைக்கு அதிகமாக குறித்த மருந்துகளை விற்பனை செய்யலாகாது.
குறித்த மருந்துகளில் பரசிட்டமோல், அமொக்சிலின், இன்சுலின், கிலாரித்ரோமைசின், அசித்ரோமைசின், செபுரொக்சிம், டொக்சிசைக்லின், செபலெக்சின், அஸ்பிரின், மெட்போர்மின், தைரொக்சீன், டொம்பெரிடோன், ரபிப்பிரசோல், உள்ளிட்ட 60 வகை அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஆயினும், கடந்த காலங்களில் ஏற்பட்ட மருந்துகளின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், குறித்த மருந்துகளின் விலைகளை மேலும் குறைக்க வேண்டுமென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துகளின் பட்டியல் வருமாறு...
Add new comment