பாரிய சுகாதார பேரிடரில் நாடு

- எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை

இலங்கை மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடுகளாலே, இந்நிலை ஏற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார் .

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துப் பற்றாக்குறை, மருந்துப் பொருட்களின் விலை உயர்வு, மருந்துகளின் ஊடான மோசடி மற்றும் ஊழல் என, நாட்டு மக்களின் வாழ்வோடு அரசாங்கம் விளையாடி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சாடினார்.


Add new comment

Or log in with...