களனி, கோணவல பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்து கடுமையான துர்வாடை வீசுவதாக களனி பொலிஸ் நிலையத்திற்கு நேற்றைய தினம் (18) கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் களனி, கோணவல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்தவர் வீட்டில் தனியாக வசித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சடலம் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதுடன் நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை என்பன இன்று (19) இடம்பெறவுள்ளது.
இது தொடர்பாக களனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment