கடற்படை அதிகாரிகள் பயணித்த அலுவலக பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை (16) தெல்கொடவிலிருந்து கிரிதர நோக்கிப் பயணித்த லொறியும் கடற்படையினரின் அலுவலக பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 39 மற்றும் 46 வயதுடைய ஹப்புத்தளை மற்றும் தெல்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், படுகாயமடைந்த மற்றைய நபர் அதே பகுதியை சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment