வெளிநாட்டு வேலை வழங்குவதாக பண மோசடி; கணவன் மனைவி கைது

வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கேகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரம்புக்கணை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று கிடைக்கப்பெற்ற 6 முறைப்பாடுகளை அடுத்து, ரூ. 8,20 000 மோசடி செய்தமை தொடர்பில் சந்தேகநபர்கள்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 27 வயதான சந்தேகநபர்கள் பெலிகொடபிட்டிய, ரம்புக்கணை எனும் இடத்தில் வசித்து வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடம்  மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள நபர்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு எதிராக 46 பேர் முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளனர்.

மேற்படி சந்தேகநபர்களால் இவ்வாறான மோசடிகளில் சிக்கியவர்கள் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்ளனர்.

சந்தேகநபர்களை இன்றையதினம் (14) கேகாலை  நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


Add new comment

Or log in with...