கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்குள் நுழைந்தவருக்கு சிக்கல்

இரு அ​டையாள அட்டைகள் வைத்திருந்ததால் கைது

ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், நுழைய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

மாத்தளை - அகலவத்தை பிரதேசத்தை நிரந்தர வதிவிடமாகவும், கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 46 வயதுடைய இம்தியாஸ் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தேவாலயத்துக்குள் பாடல்களை கேட்க வேண்டுமென்பதற்காக வந்ததாக, பொலிஸாரிடம் சந்தேக நபர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த பெருவிழா எதிர்வரும் (13) நடைபெறவுள்ளது.

இதற்கான நாளாந்த ஆராதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, இந்நபர் தேவாலயத்துக்குள் பிரவேசிக்க முயன்றுள்ளார்.

இதன்போது பிரதான வாயிலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்தின் பேரில்,இவரைக் கைது செய்தனர்.

சந்தேக நபரிடமிருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

 


Add new comment

Or log in with...