ஒரு மாகாண ஆசிரியர்களை மற்றொரு மாகாணத்திற்கு நியமிப்பது தவிர்க்க முடியாதது

- சிறீதரன் எம்பிக்கு கல்வியமைச்சர் பதில்

ஒரு மாகாணத்தில் வசிக்கும் ஆசிரியர்கள் இன்னொரு மாகாணத்துக்கு நியமிக்கப்படுகின்றமை சிக்கலானதே. எனினும் அதனைத் தவிர்க்க முடியாது என்றும் அதற்கு  மாற்று வழிகளை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான  வினாக்கள் வேளையில்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர்  இவ்வாறு தெரிவித்தார்.

வெளிமாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவதால் அவர்களுக்கு வழங்கப்படும்  37000 ரூபா சம்பளத்தில் போக்குவரத்து, தங்குமிடம், உணவு போன்ற செலவுகளை  சமாளிக்க முடியாது. எனவே அவர்களை வட மாகாணத்திலேயே நியமிக்க நடவடிக்கை எடுக்க முடியாதா என சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார்

அதற்கு கல்வியமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

வட மாகாணத்திலிருந்து ஆசிரியர் சேவைக்கு தெரிவு செய்யப்படுவோர் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்படுகின்றமை சிக்கலானதுதான். ஆனாலும் அது தொடர்பில் எதுவும் செய்ய முடியாத நிலையே தற்போது காணப்படுகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...