இழந்த வாய்ப்பை இலாபகரமாக்க பாம் ஒயில் தடை நீக்கப்படுவது அவசியம்

ஹரித தெரண சிறுதொழிலாளர் சங்கத்தின் தலைவர் நிமல் விஜேசிங்க, POUASL பிரதம செயற்பாட்டு அதிகாரி யஜித் டி சில்வா, POIASL முன்னாள் இணை உறுப்பினர் பேராசிரியர் அசோக நுகவெல, Solidaridad ஆசியாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் Dr. ஷதாத்ரு சட்டோபதாயாய், APOA பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் மோட்வானி

- இலங்கை பாம் ஒயில் தொழில்துறை சங்கம் தெரிவிப்பு

கடந்த அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட பாம் எண்ணெய் உற்பத்தி மீதான தடையை அரசாங்கம் நீக்கினால், ஏற்றுமதி வருமானமாக வருடாந்தம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடியும் என இலங்கை பாம் ஒயில் தொழில்துறை சங்கம் (POIASL) தெரிவித்துள்ளது.

இலங்கையில் எண்ணெய் பனை செய்கையில் பயன்படுத்தப்படாத சாத்தியக்கூறுகள் தொடர்பில், ஆசியாவில் தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்தரப்பு கூட்டமைப்பான ஆசிய பாம் ஒயில் கூட்டணி, சிறு உடமையாளர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை ஆதரிக்கும் உலகளாவிய வலையமைப்பு Solidaridad, இலங்கை பாமாயில் தொழிற்சங்கம் ஆகியன அண்மையில் OPA கேட்போர் கூடத்தில் கூட்டு செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்துன.

இங்கு இலங்கையில் எண்ணெய் பனை செய்கையில் பயன்படுத்தப்படாத சாத்தியக்கூறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. நிலைபேறான நடைமுறைகள் மற்றும் கிராமப்புற சமூகங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நம்பிக்கைக்குரிய, இலாபகரமான மற்றும் நிலைபேறான தொழில்துறை மூலம் அடையக்கூடிய உடனடி குறுகிய, நடுத்தர, நீண்ட கால, பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை, இந்த இரு நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகளும் எடுத்துரைத்தனர்.

பாலம் எண்ணெய்க்கான செய்கைகளை பயிரிடுவதற்கான தற்போதைய சட்ட மற்றும் ஒழுங்குமுறை தடைகள் ஆகியன இலங்கை இழந்த வாய்ப்பாக அந்நிறுவனங்கள் தெரிவித்தன. தாவர எண்ணெயைப் பெறுவதற்காகப் பயிரிடப்படும் மாற்றுப் பயிர்களைப் போலவே, தோட்டத் தொழிலாளர்களுக்கும் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கும் வருடம் முழுவதும் வருமானத்தை இது வழங்குகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களை நம்பியிருப்பதைக் குறைப்பதன் மூலம், எதிர்காலத்தில் ஒரு இலாபகரமான ஏற்றுமதித் தொழிலை உருவாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை பல்வேறு வழிகளில் உயர்த்துவதற்கான மகத்தான ஆற்றலை இது கொண்டுள்ளது.

'பாம் எண்ணெய் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்' எனும் ஆராய்ச்சி அடிப்படையிலான விஞ்ஞான ஆய்வை Solidaridad அமைப்பு வெளியிட்டுள்ளது. இது இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள 15 இற்கும் மேற்பட்ட முன்னணி விஞ்ஞானிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சி மூலமான கண்டுபிடிப்புகள் பற்றிய ஆழமான ஆய்வு மூலம் பாம் எண்ணெய் பற்றிய தகவல் மற்றும் மதிப்பீடுகளை தெரிவிக்கிறது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ. 11 பில்லியனுக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக பங்களிப்புடன், பாம் எண்ணெய் தோட்டம் மற்றும் அதன் உற்பத்தி இயந்திரங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. இப்பொருளாதாரத்தில் சுமார் 60% தோட்டங்களில் இருந்து பெறப்படுவதோடு, எஞ்சிய 40% உற்பத்தி இயந்திர துறையிலிருந்து பெறப்படுகிறது. அது மாத்திரமன்றி, இத்துறையில் 5,000 இற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சுமார் 21,000 பேருக்கான வாழ்வாதாரத்தை ஆதரிக்கின்றது. அதிக பெறுமதி கொண்ட பயிர் மற்றும் பாம் ஒயிலுக்கான அதிகப்படியான கேள்வியின் காரணமாக, ஒருருக்கு சராசரி மாத வருமானமான ரூ. 185,000 உடன், அதிக வருமானம் கொண்ட வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனையும் இத்தொழில்துறை கொண்டுள்ளது. தேயிலை, இறப்பர், தென்னை உள்ளிட்ட ஏனைய தோட்ட செய்கைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் ஒப்பிடும் போது, இது பல்வேறு வழிகளிலும் இரண்டு மடங்கு அதிக வருமானமாகும்.

இங்கு கருத்து தெரிவித்த, POIASL முன்னாள் இணை உறுப்பினரும் பிரபல பேராசிரியருமான அசோக நுகவெல, "பாம் எண்ணெய் செய்கையுடன் தொடர்புடைய பொருளாதார நன்மைகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி, கிராமப்புற மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றிற்கு, பாம் எண்ணெயின் தற்போதைய மற்றும் சாத்தியமான எதிர்கால பங்களிப்புகளை முழுமையாக மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமாகும். தவறான கொள்கைகளுக்குப் பதிலாக, சரியான மதிப்பீடு இல்லாமல், நமது நாட்டின் நிலைபேறான வளர்ச்சியில் பாம் எண்ணெய் ஏற்படுத்தக்கூடிய சாதகமான தாக்கத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்." என்றார்.

பாம் எண்ணெய் வளர்ப்பு வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள, இலங்கை எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை POIASL முன்மொழிந்தது. மிக முக்கியமாக, இலங்கையில் பாம் எண்ணெய் செய்கைகளின் நிலைபேறான செய்கைக்கான விரிவான கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம், தொழில்துறையினர் மற்றும் உள்ளூர் சமூகங்கள் உள்ளிட்ட விரிவான பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உடனடித் தேவையாக உள்ளது.

APOA இன் பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் மோத்வானி இதன்போது கருத்து வெளியிடுகையில், “நிலைபேறான பாம் எண்ணெய் உற்பத்தியின் சாதகமான விளைவுகளை எமது பிராந்தியத்திலுள்ள கூட்டாளர்ள் எடுத்துக்காட்டுகின்றனர். உதாரணமாக, மலேசியா மற்றும் இந்தோனேஷியா, இந்தப் பயிரின் திறனைப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் மட்டுமல்லாமல், நிலைபேறான, சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான மற்றும் மதிப்புச் சங்கிலிகளை நிறுவுவதற்கான, கிராமப்புற சமூகங்களை மேம்படுத்தவும் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளன.

பாம் எண்ணெயை இலங்கையில் தடை செய்து விட்டு, அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட்கள் போன்ற தின்பண்டங்களை தயாரிப்பதும், இறக்குமதி செய்வதும் நகைப்புக்குரியதாகுமென இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், பாம் எண்ணெய் மரங்கள் நிலக்கீழ் நீரை அதிகம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படும் கருத்து, எவ்வித ஆதாரமும் அற்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

வெளிநாட்டு இறக்குமதியை தவிர்க்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாம் எண்ணெய்க்காக பல மில்லியன் ஏக்கர் காணிகளை ஒதுக்கியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறு நிரூபிக்கப்பட்ட பல்வேறு நடைமுறைகளைப் பயன்படுத்தி, இலங்கையில் பாம் எண்ணெய்ச் செய்கையை நிலையானதாகவும், ஐ.நா.வின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு இணங்குவதையும் உறுதிசெய்ய, எமது வெற்றியை விரைவாகக் கண்காணிக்க முடியும்.

POIASL பற்றி
இலங்கையின் பாம் எண்ணெய் தொழிற்துறை சங்கம் (POIASL) ஆனது, இலங்கையில் உள்ள பாம் எண்ணெய் தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அமைப்பாகும். நிலைபேறான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒரு தூரநோக்குடன், அரசாங்க அமைப்புகள், முன்னணி தொழில்துறையாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை எளிதாக்குவதில் POIASL முக்கிய பங்கு வகிக்கிறது. பாம் எண்ணெய்ச் செய்கை, உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளை நிலைநிறுத்த இச்சங்கம் பாடுபடுகிறது. அதே நேரத்தில் பொறுப்பான சூழல் பொறுப்புணர்வுக்காக அது துணை நிற்கிறது. நிலைபேறான நடைமுறைகளை ஊக்குவித்து, கிராமப்புற சமூகங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து, POIASL ஆனது இலங்கையில் பாம் எண்ணெய் தொழில்துறையின் பொருளாதார ஆற்றலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்களிப்பு செய்யப்படுகிறது.


Add new comment

Or log in with...