பொலிஸாரால் கைதாகி விசாரணை
அவிசாவளை நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட, ஐம்பது இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கெப் வண்டியில் வந்த சாரதியே, இப்பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றார். தகவலையறிந்த பொலிஸார் இவரை,
அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் கைது செய்ததாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். இச்சந்தேகநபரான சாரதி, பணிக்கு வந்து 15 நாட்களே ஆகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபருடன் சுமார் முப்பது இலட்சம் பணம் மற்றும் பணம் வைத்திருந்த பை, இரண்டு கைத்தொலைபேசிகள், நான்கு காசோலைகள் மற்றும் அந்த பணத்தில் அவர் வாங்கிய ஆடைகள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவருக்கு உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபரின் மனைவியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் (26) அவிசாவளை ரன்வல பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின் காசாளர் ஒருவர், ஒரு கோடி ரூபாவுக்குமதிகமான பல காசோலைகளை, இரண்டு பைகளில் வைத்து வங்கியில் வைப்பிலிடுவதற்காக கெப் வண்டியில் சென்றுள்ளார்.
வங்கியில் , ஒரு பகுதியை வைப்பிலிடச் செல்லும் போது, காசாளர் சாரதியை அழைத்து, வாகனத்தில் பணப் பை இருப்பதாகவும், விரைவில் வருவதாகவும் கூறிவிட்டு சென்ற போது சாரதி பணத்துடன் மாயமானதாக பொலிஸாரின் ஆரம்பக்கப்ட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment