பொசன் தினத்தையிட்டு 440 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

நாளைய (03) பொசன் பௌர்ணமி மத அனுஷ்டான தினத்தையிட்டு 440 கைதிகளுக்கு, ஜனாதிபதி விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 34ஆவது பிரிவிற்கு அமைய, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இவ்விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளையும் உள்ளடக்கியதாக 434 ஆண் கைதிகள் 06 பெண் கைதிகள் ஆகிய 440 கைதிகளுக்கு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சிறு குற்றங்களுடன் தொடர்புடையோர், தண்டப் பணம் செலுத்த முடியாதோர், தண்டனைக் காலம் நிறைவடையவுள்ளோர் உள்ளிட்டோரே இவர்களில் பெரும்பாலானோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...