பிரதமர் தினேஷ் குணவர்தன தாய்லாந்து விஜயம்

பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று தாய்லாந்துக்கு பயணமாகியுள்ளார்.

இன்று (31) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் அவர் பயணத்தை மேற்கொண்டதாக விமான நிலைய உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இன்னும் சில தினங்களில் தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 'சக் சுறித்' என்ற விசேட புனித பொருள் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான  UL 402 இலக்க விமானத்திலேயே பிரதமர் தலைமையிலான 11 பேர் அடங்கிய தூதுக்குழு தாய்லாந்தின் பாங்ஹொக் நகரத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணித்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...