"கவிநயம் சுடர் மணி" விருது பெற்றார் ஸக்கியா சித்திக் பரீட்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் பசுமை வாசல் பவுண்டேஷன் நடாத்திய கோடைகால "நட்சத்திர சுடர் மணி - 2023" விருதுகள் போட்டியில் கவிதைப்பிரிவில் இலங்கையிலிருந்து பங்கு பற்றிய சிரேஷ்ட எழுத்தாளர், ஆசிரியர், கவிஞருமான கலாபூசணம் ஸக்கியா சித்திக் பரீட் "கவிநயம் சுடர் மணி"  விருதைப் பெற்றுக் கொண்டார்.

இந்திய பசுமை வாசல் பவுண்டேஷன் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சமூகப்பணி, இலக்கியப் பணி, இயற்கைப் பணி எழுத்துப்பணியில் ஈடுபட்டு வருகின்ற பல்துறை சாதனையாளர்களுக்கு தொடர்ந்தும் பல தலைவர்களின் பேரில் பிறந்தநாளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கோடைகாலத்தில் தங்களது திறமைகளை வெளிக் கொணர்ந்து அவர்களின் படைப்புகளின் தன்மைகளை வெளிக்கொணரவும் கதை, கவிதை, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளை நடாத்தியது.

இதில் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.ஸாகிர்


Add new comment

Or log in with...