ஜூன் மாத விலைத் திருத்தத்துடன் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்

தேசிய எரிபொருள் அட்டையின் (National Fule Pass) அடிப்படையில் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ள (QR) எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து இதனை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, இது தொடர்பில் ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) நிதிப் பிரிவு, வர்த்தக பிரிவு, சந்தைப்படுத்தல் பிரிவுகளுடன் நேற்று (25) பிற்பகல் மேற்கொண்ட கலந்துரையாடலில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் CPC சரக்கு போக்குவரத்து திட்டம், நிதி திட்டம் மற்றும் விநியோகத் திட்டங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட செலாவணி கையிருப்பு குறைவை அடுத்து, கடந்த வருடம் எரிபொருள் இறக்கமதி மட்டுப்படுத்தப்பட்டு, வாகனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான தேசிய எரிபொருள் அட்டை கடந்த வருடம் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாட்டில் படிப்படியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தொடர்ந்து, புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி, வானங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடுகள அதிகரிக்கப்பட்டதோடு, அது தற்போது வரை நடைமுறையில் உள்ளமை குறிப்பபிடத்தக்கது.


Add new comment

Or log in with...