சீனா அன்பளிப்பு செய்த 4.05 மில். லீற்றர் மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

- 27,000 மீன்பிடி படகுகளுக்கு தலா 150 லீற்றர் மண்ணெண்ணெய்

சீனவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு இன்று (23) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இன்று (23) காலை இது தொடர்பான வைபவம் பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, இலங்கைக்கான சீன தூதுவர் சி ஷென்ஹோங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதற்கமைய, நாடு முழுவதும் உள்ள 27,000 மீன்பிடி படகுகளுக்காக வழங்க்பபட்டட 4.05 மில்லியன் லீற்றர்  மண்ணெண்ணெய் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக, இலங்கையிலுள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, 27,000 மீன்பிடி படகுகளுக்கும் தலா 150 லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் இடுகையில், நாம் எமது இலங்கை சகோதர சகோதரிகளுடன் ஒரே படகில் ஆற்றைக் கடக்கிறோம் என பதிவிடப்பட்டுள்ளது.

 

 


Add new comment

Or log in with...