- ஹட்டன் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு சேமித்து வைப்பு
தம்புள்ளை, பன்னம்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அரிசி ஆலை ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 7,051 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் நேற்று (10) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த கழிவு தேயிலையை மீட்டுள்ளனர்.
ஹட்டன் பகுதியில் இருந்து பன்னம்பிட்டியில் உள்ள குறித்த அரிசி ஆலைக்கு இந்த கழிவு தேயிலை கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வட்டதெனிய வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்றையதினம் (11) தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Add new comment