இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் சங்மின் ரியுவுடன், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார்.
தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெறும் 56 ஆவதுஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற அமைச்சர் அலி சப்ரி, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் நிதி அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று பணிப்பாளருடன் கலந்துரையாடியுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தென் கொரியா என்பன E-Asia நிதியத்தினூடாக இலங்கைக்கு தமது ஆதரவை வழங்குமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
Add new comment