எரிபொருள் திறன் குறித்து போலி பிரசாரம் முன்னெடுப்பு

சமூக ஊடக செய்திகளுக்கு IOC மறுப்பு

வாகன எரிபொருள் திறன் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மறுத்துள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலையால், கொள்ளளவுக்கு அதிகமாக எரிபொருளை நிரப்புவதைத் தவிர்க்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அது வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில்

தகவல்கள் பரவி வருகின்றன.

இது குறித்து தெளிவுபடுத்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள ஐ.ஓ.சி, அத்தகைய எச்சரிக்கை எதையும் வெளியிடவில்லையென்றும், இது சமூக ஊடக தளங்களில் பரப்பப்படும் ஒரு போலி செய்தியெனவும் குறிப்பிட்டுள்ளது. கால நிலைகளைப் பொருட்படுத்தாமல் வாகன தயாரிப்பாளர்களினால் குறிப்பிடப்பட்ட அதிகபட்சம் வரம்பு வரை, வாகனங்களில் எரிபொருளை நிரப்புவது முற்றிலும் பாதுகாப்பானதென ஐ.ஓ.சி. மேலும் தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...