ஏப்ரல் 13, 14 இல் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

புத்தாண்டையிட்டு நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) ஆகிய இரு தினங்களிலும் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்குமென மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மதுவரித் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அதனுடன் இணைந்தவாறு நாடு முழுவதும் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பிலான சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் அறியத்தர 1913 எனும் துரித தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...