1st T20; SLvNZ: ஓட்டங்கள் சமனிலையான போட்டியில் இலங்கை சுப்பர் ஓவரில் வெற்றி (VIDEO)

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் ஒக்லாந்தில் இடம்பெற்ற முதலாவது சர்வதேச ரி20 போட்டியில் இலங்கை அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 196 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 67 (41) ஓட்டங்களையும் குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 53* (45) ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 25 (09) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம் 2/30 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 197 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்று போட்டியை சம்னிலைப்படுத்தியது.

இரு அணிகளும் சம ஓட்டங்களை பெற்றதனால், சுப்பர் ஓவரில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க வேண்டி ஏற்பட்டது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதில் ஜேம்ஸ் நீஷம் ஓட்டம் எதுவும் பெறாமல் பந்துவீசிய மஹீஷ் தீக்‌ஷனவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். டெரில் மிச்சல் ஆட்டமிழக்காமல் *01 (01) ஓட்டத்தையும், மார்க் சப்மன் 06 (04) ஓட்ங்களையும் பெற்றனர். அவர் இறுதிப் பந்தில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பர் ஓவரில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 பந்துகளில் 12 எவ்வித விக்கெட்டுகளும் இழப்பின்றி 12 ஓட்டங்களை பெற்று போட்டியை வென்றது.

இதில் சரித் அசலங்க 10* (02) ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 01* (01) ஓட்டத்தையும் பெற்றனர்.

போட்டியின் நாயகனாக சரித் அசலங்க தெரிவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என நியூஸிலாந்து அணி கைப்பற்றியிருந்த நிலையில், 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரில் 1ஆவது போட்டியை வென்றுள்ள இலங்கை அணி 1-0 என முன்னிலை வகிப்பதோடு, இத்தொடரின் 2ஆவது போட்டி எதிர்வரும் ஏப்ரல் 05ஆம் திகதியும், 3ஆவது போட்டி ஏப்ரல் 08ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka  (20 ovs maximum)
BATTING   R B M 4s 6s SR
Pathum Nissanka  c †Latham b Milne 0 1 1 0 0 0.00
Kusal Mendis † c Ravindra b Shipley 25 9 20 3 2 277.77
Kusal Perera  not out 53 45 96 4 1 117.77
Dhananjaya de Silva  c Sodhi b Neesham 15 10 9 1 1 150.00
Charith Asalanka  c Seifert b Lister 67 41 50 2 6 163.41
Dasun Shanaka (c) c Milne b Neesham 1 3 3 0 0 33.33
Wanindu Hasaranga de Silva  not out 21 11 13 0 2 190.90
Extras (lb 5, w 9) 14  
TOTAL 20 Ov (RR: 9.80, 98 Mins) 196/5
 
Fall of wickets: 1-0 (Pathum Nissanka, 0.1 ov), 2-47 (Kusal Mendis, 3.2 ov), 3-65 (Dhananjaya de Silva, 5.1 ov), 4-168 (Charith Asalanka, 16.3 ov), 5-171 (Dasun Shanaka, 17.1 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Adam Milne 4 0 42 1 10.50 9 3 3 2 0
Benjamin Lister 4 0 43 1 10.75 8 5 1 3 0
Henry Shipley 4 0 43 1 10.75 8 0 4 3 0
James Neesham 4 0 30 2 7.50 9 1 2 0 0
Ish Sodhi 4 0 33 0 8.25 6 1 2 1 0
New Zealand  (T: 197 runs from 20 ovs)
BATTING   R B M 4s 6s SR
Chad Bowes  b Madushanka 2 3 6 0 0 66.66
Tim Seifert  lbw b Theekshana 0 3 3 0 0 0.00
Tom Latham (c)† c sub (MNK Fernando) b Pramod Madushan 27 16 36 5 0 168.75
Daryl Mitchell  c DM de Silva b Shanaka 66 44 71 5 3 150.00
Mark Chapman  c DM de Silva b PWH de Silva 33 23 30 2 2 143.47
James Neesham  c Pramod Madushan b PWH de Silva 19 10 13 2 1 190.00
Rachin Ravindra  c PWH de Silva b Shanaka 26 13 20 2 2 200.00
Adam Milne  c Asalanka b Pramod Madushan 3 4 13 0 0 75.00
Henry Shipley  not out 1 1 7 0 0 100.00
Ish Sodhi  not out 10 4 5 0 1 250.00
Extras (b 6, nb 1, w 2) 9  
TOTAL 20 Ov (RR: 9.80, 104 Mins) 196/8
 
Did not bat: Benjamin Lister 
Fall of wickets: 1-1 (Tim Seifert, 0.4 ov), 2-3 (Chad Bowes, 1.1 ov), 3-66 (Tom Latham, 7.4 ov), 4-132 (Mark Chapman, 14.1 ov), 5-144 (Daryl Mitchell, 15.4 ov), 6-156 (James Neesham, 16.6 ov), 7-184 (Adam Milne, 18.6 ov), 8-184 (Rachin Ravindra, 19.1 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Maheesh Theekshana 4 0 22 1 5.50 11 3 0 0 0
Dilshan Madushanka 3 0 45 1 15.00 5 3 4 0 1
Pramod Madushan 4 0 37 2 9.25 4 5 0 2 0
Chamika Karunaratne 3 0 36 0 12.00 2 3 2 0 0
Wanindu Hasaranga de Silva 4 0 30 2 7.50 9 1 2 0 0
Dasun Shanaka 2 0 20 2 10.00 3 1 1 0 0
 
New Zealand  (Super Over)
Batting R B 4s 6s S/R  
Daryl Mitchell
1 1 0 0 100.00
not out
James Neesham
0 1 0 0 0.00

Mark Chapman
6 4 1 0 150.00

Extras 1 (W 1)
Total runs 8 (2 wkts, 1 ov)
Fall of Wickets
2/1 (J. Neesham, 0.2 ov) · 8/2 (M. Chapman, 0.6 ov)
Bowling O M R W Econ  
Maheesh Theekshana
1.0 0 8 2 8.00
 
Sri Lanka (Super Over)
Batting R B 4s 6s S/R  
Kusal Mendis
(Wk)
1 1 0 0 100.00
not out
Charith Asalanka
10 2 1 1 500.00
not out
Extras 1 (NB 1)
Total runs 12 (0 wkts, 0.2 ov)
Yet to bat
Kusal Perera
Bowling O M R W Econ  
Adam Milne
0.2 0 12 0 36.00

 


Add new comment

Or log in with...