தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு

22 கரட் ஒரு பவுண் ரூ. 1,65,600

தங்கத்தின் விலை நேற்று 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக, செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 165,600 ரூபாவாக நேற்று பதிவாகியது.மேலும், 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 1,80,000 ரூபாவாக பதிவாகியது.

இதேவேளை, உலக சந்தையில் தங்கத்தின் விலையும் 25 டொலர்களால் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்று 1,983 டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...