உலகக் கிண்ண நேரடித் தகுதிக்கு தென்னாபிரிக்கா வலுவான ஏற்பாடு

உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறுவதற்கு தீர்க்கமாக உள்ள நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடருக்கு தென்னாபிரிக்க அணி டெம்பா பவுமா தலைமையில் வலுவாக அணியை அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்க மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளும் வரும் மார்ச் 31 ஆம் திகதி பொனோனியிலும், ஏப்ரல் 2ஆம் திகதி ஜொஹன்னஸ்பேர்க்கிலும் நடைபெறவுள்ளன. உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதி பெற தென்னாபிரிக்கா இந்தப் போட்டியில் வெற்றியீட்டுவது கட்டாயமாகும்.

அணி விபரம்: டெம்பா பவுமா (தலைவர்), குவின்டன் டி கொக், பிஜோன் போர்டுன், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜேன்சன், ஹின்ட்ரின் கிளாசன், சிசன்டா மனலா, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ட்ரிக் நோர்ட்ஜே, வெயின் பார்னல், ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷம்சி, ரசி வான்டர் டுசன்.


Add new comment

Or log in with...