இலவச பேரீச்சம்பழங்களுக்கு விசேட பண்ட வரி ரூ. 200 இலிருந்து ரூ. 1 ஆக குறைப்பு

பேரீச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்கள் வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து ரூ. 1 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ரமழான்  நோன்பை முன்னிட்டு நிவாரண நடவடிக்கையாக ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அந்த வகையில் வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும்  நலன்விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நியச் செலாவணியும்  செலவிடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக  கிடைக்கும் பேரீச்சம்பழங்களுக்கு மாத்திரம் இந்த  வரிச் சலுகை செல்லுபடியாகும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பரிந்துரையின் பேரில் பல்வேறு நாடுகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து அன்பளிப்பாக அல்லது நன்கொடையாக இலங்கைக்கு கிடைக்கும் பேரீச்சம்பழங்களுக்கு மாத்திரமே இந்த  வரிச் சலுகை செல்லுபடியாகும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் 2022 நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2308/17 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஜனாதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...