கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்; கண்ணீர்ப்புகை பிரயோகம்

- காயமடைந்த 20 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

கொழும்பில் தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நடத்திய கண்ணீர்ப் புகை மற்றும் நீர்தாரை பிரயோகங்களில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 28 பேர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு இப்பன்வல சந்தி மற்றும் நகர மண்டபம் அருகில் இரு தடவைகள் இவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை ஆர்ப்பாட்டம் காரணமாக நெலும் பொகுண அரங்கில் இருந்து நகர மண்டபம் நோக்கிய வீதி முற்றாக மூடப்பட்டிருந்தது.

தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை நடத்துமாறு கோரி, இந்த ஆர்ப்பாட்டம் தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...