- மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடல்
கிராமிய கடன்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பு தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.
உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (23) கூடியபோதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, இலங்கை கொள்கைகள் கற்கை நிறுவனம் மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி வேலைத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வேலைத்திட்டங்கள் ஊடாக நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இந்த நிவாரணங்களை குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு முறையாக வழங்குவது தொடர்பில் முறைமையொன்றை தயாரிப்பது பற்றி வருகை தந்தவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
அதேபோன்று, சமுர்த்தி வங்கி உள்ளிட்ட கிராமிய வங்கிகள் ஊடாக கடன்களை வழங்குவது தொடர்பிலும் இந்தபோது கவனம் செலுத்தப்பட்டது.
Add new comment