ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் சீனாவுக்கு மீண்டும் 3 விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
சீனா தனது நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதை தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் சீனாவுக்கான தனது வணிக விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, ஸ்ரீலங்கன் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, சீனாவின் ஷங்காய், பீஜிங், குவாங்சோ ஆகிய 3 நகரங்களுக்கு இவ்வாறு விமானப் போக்குவரத்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
புதுப்பிக்க உள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான விமான சேவைகளை ஆரம்பிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
வாராந்தம் திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கொழும்பில் இருந்து ஷாங்காய் நகருக்கு விமானசேவை இடம்பெறுவதோடு, செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் ஷங்காய் நகரிலிருந்து கொழும்பு நோக்கி விமான சேவைகள் இடம்பெறவுள்ளது.
கொழும்பில் இருந்து பீஜிங் நகருக்கான விமான சேவைகள் ஏப்ரல் 03 இல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், வாராந்தம் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் பீஜிங் நகருக்குப் புறப்படுவதோடு, அதற்கு நாளில் மீண்டும் கொழும்பு நோக்கி விமானம் திரும்பும்.
ஸ்ரீ லங்கன் தற்போது கொழும்பு மற்றும் குவாங்சூ இடையே வாராந்தம் ஒரு விமான சேவையை நடாத்தி வருவதோடு, இரண்டாவது விமான சேவையை மார்ச் 04 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
அதற்கமைய, 2023 ஏப்ரல் 04 முதல் வாராந்தம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் கொழும்பிலிருந்து குவாங்சூ நகருக்கு விமான சேவைகள் இடம்பெறவுள்ளதோடு, அங்கிருந்து கொழும்பு நோக்கி வாராந்தம் புதன், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் சேவைகளை ஈடுபடுத்தவுள்ளது.
Add new comment