கில்லின் சாகச சதத்தால் இந்தியா தொடர் வெற்றி

இந்திய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில்லின் அபார சதத்தின் உதவியோடு நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை 168 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி தொடரை 2–1 என கைப்பற்றியது.

அஹமதாபாத்தில் கடந்த புதனன்று (01) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இந்திய அணிக்காக கில் 63 பந்துகளில் 126 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 234 ஓட்டங்களை பெற்றது.

23 வயதான கில், இந்த ஆண்டில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் 12 இன்னிங்ஸ்களில் ஒரு இரட்டைச் சதம், மூன்று சதம் மற்றும் ஒரு அரைச் சதத்தை பெற்றுள்ளார். இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சதம் பெற்ற ஐந்தாவது இந்திய வீரராகவும் அவர் பதிவானார்.

இதில் டி20 சர்வதேச போட்டியில் சதம் பெற்ற ஏழாவது இந்திய வீரராகவும் அவர் இடம்பெற்றார். இது கில்லின் ஆறாவது டி20 போட்டியாகும்.

கடந்த மாதம் அவர் ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் பெற்ற இளம் வீரராக பதிவானமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய நியூசிலாந்து அணி 66 ஓட்டங்களுக்கே சுருண்டது.


Add new comment

Or log in with...