வெண்கல விருதை வென்றெடுத்துள்ள பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி

வங்கி அல்லாத நிதி நிறுவனத் துறையில் விருது பெற்ற நிதித் தீர்வு வழங்குநரான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற, இலங்கை பட்டய கணக்காளர்கள் டெக்ஸ் (TAGS) விருதுகள் 2022 விழாவில் வெண்கல விருதை வென்றது. நிறுவனத்தின் 2021/22 ஆண்டறிக்கை வங்கி அல்லாத நிதி நிறுவனத் துறையில் (மொத்த குழும சொத்து 20 பில்லியன் ரூபாய்க்கு அதிகம்) வெண்கல விருதைப் பெற்றுள்ளது.

உலகளாவிய மற்றும் தேசிய அளவில் பிஎல்சியின் தொடர்ச்சியான அங்கீகாரத்தின் வருடாந்த அறிக்கையானது, சமூகப் பொறுப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் நிதி அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளின் பிரதிபலிப்பாகும்.

இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் டெக்ஸ் விருதுகள் 2022ஐ ஏற்பாடு செய்ததோடு, இது பல்வேறு வணிகத் துறைகளில் நாட்டில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் நிறுவப்பட்ட கூட்டு நிகழ்வுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 57 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பையும் இருப்பையும் குறிக்கும் இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் இந்த வருடம் விருதுகளில் மிகவும் மதிப்புமிக்க வருடாந்த அறிக்கை விருதுகளை மீள் கருத்தாக்கம் மற்றும் மீள்நாமமிடல் (Re-Branding) மூலம் மேம்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மைக்கான தனது தேடலைப் பாதுகாத்து நாட்டில் கூட்டாண்மை அறிக்கையிடலில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறித்து நிற்கின்றது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி என்பது இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும், மேலும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங் பங்களாதேஷில் ஒரு துணிகர வெளிநாட்டு முயற்சி உட்பட, ஆறு துணை நிறுவனங்களைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாக வளர்ந்துள்ளது.


Add new comment

Or log in with...