25,000 மெ.தொன் யூரியாவை கொள்வனவு செய்ய திட்டம்

1,00,000 மெ.தொ யூரியாவை கையிருப்பில் வைக்கவும் தீர்மானம்

 

இந்த வருடத்தின் சிறுபோக நெற்செய்கை மற்றும் சோளப் பயிர்ச்செய்கைக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கென 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

தற்போது இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொந்தமான களஞ்சியசாலைகளில் 30,000 மெற்றிக்தொன் யூரியா உரம் காணப்படுகிறது. அதற்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக்தொன் உரத்தை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த உரங்களுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் கொள்வனவு செய்வதற்காகவே 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க, ஒரு இலட்சம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை கையிருப்பில் வைத்துக்கொள்வதற்கும் அதன்மூலம் சிறுபோக நெற் பயிர்ச்செய்கை மற்றும் சோளப் பயிர்ச்செய்கை உள்ளிட்ட பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு அதனைப் பெற்றுக்கொடுக்கவும் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...