புகையிரதத்தில் மோதுண்டு 3 காட்டு யானைகள் பலி

- மட்டக்களப்பு - கொழும்பு புகையிரதம் தடம் புரள்வு

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதில் 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

இன்று (13) அதிகாலை 1.30 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த 'புலதிசி' நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதம், கல்ஓயா மற்றும் ஹதரஸ்கொட்டுவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் இவ்வாறு 3 காட்டு யானைகளுடன் மோதியதில் தடம் புரண்டுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக குறித்த புகையிரதம் கொழும்பு கோட்டை நோக்கி இயக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், புகையிரத எஞ்ஜினும் மற்றுமொரு பெட்டியும் தடம் புரண்டதாக, புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...