ஓய்வு பெறுவோரின் சேவை தேவையாயின் ஒப்பந்த அடிப்படையில் இணைக்கவும்

- ஜனாதிபதி செயலகம் புகையிரத திணைக்களத்திற்கு பணிப்புரை

ஓய்வு பெறுவோரின் சேவை தேவையாயின் ஒப்பந்த அடிப்படையில் இணைக்குமாறு, ஜனாதிபதி செயலகம் புகையிரத திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.

60 வயதாகும் அரச ஊழியர்களுக்கு டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு வழங்குகின்ற, 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய, இன்றையதினம் (31) நாடு முழுவதும் உள்ள அரசாங்க நிறுவனங்களிலிருந்து சுமார் 30,000 பேர் ஓய்வு பெறுகின்றனர்.

அதற்கமைய இன்று (31) முதல் 60 வயதில் ஓய்வுபெறும் அத்தியாவசிய ஊழியர்களின் சேவைகள் மேலும் தேவைப்படுமாயின், அவர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளுமாறு, பணிப்புரை விடுத்துள்ளதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...