ஜனாதிபதியினால் 2 மாகாணங்களுக்கு பிரதம செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இரு பதவிகள் தொடர்பான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்தின் பிரதம செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவும், மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக பிரதீப் யசரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நியமனம் எதிர்வரும் 2023 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...