தொடர்ச்சியாக 2ஆவது வருடமாக SLIM Brand Excellence இல் விருது பெற்ற க்ளோகார்ட்

க்ளோகார்டின் தயாரிப்புப் வரிசையில் புதிதாக இணைந்த தயாரிப்புகளில் ஒன்றான Clogard Natural Salt ஆனது, 2022 ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற SLIM Brand Excellence Awards விருது நிகழ்வில் 'வருடத்தின் சிறந்த புது வரவு வர்த்தகநாமம்' (Best New Entrant Brand of the Year) பிரிவின் கீழ் வெள்ளி விருதை வென்றுள்ளது. Brand Excellence Awards ஆனது, விடாமுயற்சி மற்றும் சிறந்து விளங்குதல் தொடர்பில் சந்தையில் சிறந்த வர்த்தக முயற்சிகளுக்கு அங்கீகாரமளித்து கௌரவமளிக்கும் நிகழ்வாகும்.

2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Clogard Natural Salt தயாரிப்பானது, இலங்கையர்களிடையே அதிகரித்து வரும் ஈறு பிரச்சினைகளுக்கு சரியான நேரத்திலான தீர்வாக விளங்குகின்றது. 2015-2016 தேசிய வாய்ச் சுகாதார கணக்கெடுப்பு புள்ளிவிபரமானது, மக்களிடையே பற் குழிகள் குறைந்து வரும் போக்கைக் காண்பிக்கின்றன. அதே நேரத்தில் ஈறு பிரச்சினைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை அது காட்டுகின்றது. இது நாட்டில் வாய்ச் சுகாதாரம் தொடர்பான மிகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது.

இந்த விருது குறித்து Hemas Consumer Brands சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் டெரிக் அன்டனி கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கையிலுள்ள முன்னணி வாய்ச் சுகாதார பராமரிப்பு நிபுணரான க்ளோகார்ட், அன்றாட வாய்ச் சுகாதார பராமரிப்புத் தேவைகளுக்காக உப்பை உபயோகப்படுத்தும் முயற்சியாக, பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட தீர்வொன்றை நாடியது. Clogard Natural Salt அறிமுகத்தின் மூலம் இம்முயற்சி நிறைவேறியுள்ளது. கொவிட் தொற்றுக்கு மத்தியில் இத்தாயரிப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், விதிவிலக்கான வகையில் நுகர்வோர் மத்தியில் இத்தயாரிப்பினால் சிறப்பான இடத்தை பிடிக்க முடிந்துள்ளது. பற்கள் மற்றும் ஈறுகள் ஆகிய இரண்டிற்கும் ஒரு பாதுகாப்புப் பொருளாகச் செயற்படுகின்ற இத்தயாரிப்பானது, வழங்கும் பணத்திற்கு அதிக மதிப்பை வழங்குவதும் அது இந்த இடத்தை பிடித்தமைக்கு ஒரு காரணமாகும். Clogard Natural Salt இனால் வெற்றி கொள்ளப்பட்ட இவ்விருதானது, நுகர்வோரிடையே இத்தயாரிப்பின் மதிப்புக்கு கிடைத்த ஒரு சான்றாகும். இக்கடினமான காலத்தில் கூட இத்தாயரிப்பை கவர்ச்சிகரமான தெரிவாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்." என்றார்

தனிநபர் பராமரிப்பு மற்றும் தூய்மை பிரிவில் உள்ளடங்கும் வீட்டுப் பாவனை பெயராக விளங்கும் க்ளோகார்ட் ஆனது, தனது தயாரிப்புகள் மூலம் அதன் வாடிக்கையாளர்களிடையே பெருமதிப்பையும், புத்தாக்கத்தையும் உருவாக்கி வருகிறது. Clogard Natural Salt ஆனது, பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், Hemas E-store ஆகிய இடங்களில் கிடைக்கிறது. இது க்ளோகார்டின் பரந்துபட்ட தயாரிப்புகளில் புதிய தயாரிப்புகளில் ஒன்றாகும். இது ஆரோக்கியமான ஈறுகள், வலுவான பற்களுக்கு வழிவகுப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக சிறந்த வாய்ச் சுகாதாரத்தை உறுதி செய்கிறது.


Add new comment

Or log in with...