- சுற்றுலாத்துறைக்கான பாஸ்மதி இறக்கமதிக்கு அனுமதி
- ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி
அரிசி இறக்குமதியை அனுமதிப்பத்திர முறையின் கீழ் வழங்கும் வகையில், அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சர் என்ற ரீதியில் அதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
கடந்த வருட சிறு போகத்துடன் ஒப்பிடும் போது, இவ்வருட சிறு போகத்தில் நெல் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளது. உரங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி உள்ளிட்ட விடயங்கள் அதில் செல்வாக்கு செலுத்தியிருந்தது. இதன் காரணமாக நெல் விலையில் ஓரளவு சரிவும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது விவசாயிகள் வாழ்வாதார பலம் அடையும் நிலையில் உள்ளனர். விவசாயிகளைப் போலவே நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டும். அதன் பிரகாரம், ஜனாதிபதி அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானித்ததாக, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அரைக்கப்பட்ட, தீட்டப்பட்ட அல்லது தீட்டப்படாத பச்சை அல்லது புழுங்கல் அரிசியின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஆயினும் சுற்றுலாத் துறைக்கு அத்தியாவசியமான பாஸ்மதி அரிசியை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
2022 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் கப்பலில் ஏற்றப்பட்டு கொள்வனவுக்காக கோரப்பப்பட்ட, திறக்கப்பட்ட கடன் கடிதங்கள் (LC) மற்றும் முற்பணம் செலுத்தப்பட்ட கொள்வனவுக் கோரிக்கைகளுக்கு விசேட அனுமதியின் கீழ் விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அச்சுக்காக அனுப்பப்பட்ட அதி விசேட வர்த்தமானியின் பிரதி வருமாறு
\
Add new comment