தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18; பரீட்சை நிலையங்கள் 2,894

- பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,894 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை இடம்பெறவுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை, இப்பரீட்சையின் 60 வினாக்கள் கொண்ட (பல்தேர்வு, சுருக்க விடைகள்) பகுதி II வினாத்தாள் முதலிலும், இடைவேளையைத் தொடர்ந்து 40 வினாக்கள் கொண்ட (3 தெரிவுகள் கொண்ட பல்தேர்வு வினாக்கள்) பகுதி I வினாத்தாளும் வழங்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இப்‌ பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும்‌ வரவு இடாப்பு உறிய பாடசாலை அதிபர்களுக்குத்‌ தபாலில்‌ தற்போது அனுப்பப்பட்டூள்ளன. இதுவரையில்‌ இவ்‌ வரவு இடாப்பு ஆவணம்‌ கிடைக்கப்பெறாத பாடசாலைகளின்‌ அதிபர்கள்‌ துல்‌ ஆவணத்தைப்‌ பெற்றுக்கொள்வதற்காக கீழே தரப்பட்டுள்ளவாறு செயற்பட வேண்டும்‌.

இப்‌ பரீட்சைக்கு நிகழ்நிலை முறைமையின்‌ மூலம்‌ விண்ணப்பித்த பரி்சார்த்திகளின்‌ விவரங்களடங்கிய அச்சுப்பிரதியுடன்‌, வேண்டுகாள்‌ கடிதமொன்றையும்‌ இணைத்து இத்திணைக்களத்தின்‌ பாடசாலைப்‌ பரீட்சைகள்‌ ஒழுங்கமைப்பு, பெறுபேற்றுக்‌ கிளைக்கு உடனடியாக வருகைதந்து அவ்‌ ஆவணத்தைப்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌.

தொடர்புகள்‌ :

  • தொலைபேசி இலக்கம்‌ : 011- 2785922, 278420, 2784537, 278616.
  • அவசர அழைப்பு இலக்கம்‌ : 119
  • தொலைநகல்‌ இலக்கம்‌ : 011-278422
  • தபால்‌ முகவரி :

பரீட்சை ஆணையாளர்‌ நாயகம்‌,
பாடசாலைப்‌ பரீட்சைகள்‌ ஒழுங்கமைப்புக்‌ கிளை,
இலங்கை பரீட்சைத்‌ திணைக்களம்‌,
பெலவத்தை, பத்தரமுல்ல


Add new comment

Or log in with...