உலகக் கிண்ணத்தில் இணைகிறார் மெஸ்ஸி

கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான ஆர்ஜன்டீன அணியில் தனது ஐந்தாவது உலகக் கிண்ண தொடரில் ஆடுவதற்கு லயனல் மெஸ்ஸி அழைக்கப்பட்டுள்ளார்.

26 பேர் கொண்ட ஆர்ஜன்டீன குழாத்தில் 35 வயது மெஸ்ஸி மற்றும் 34 வயது அன்ஜெல் மரியாவுடன் மான்செஸ்டர் சிட்டி முன்கள வீரர் ஜூலியன் அல்வாரெஸ் போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

வரும் நவம்பர் 20ஆம் திகதி ஆரம்பமாகும் பிஃபா உலகக் கிண்ணப் போட்டியில் ஆர்ஜன்டீன அணி தனது முதல் ஆட்டத்தில் நவம்பர் 22 ஆம் திகதி சி குழுவுக்காக சவூதி அரேபியாவை எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்து அந்த அணி போலந்து மற்றும் மெக்சிகோ அணிகளை சந்திக்கவுள்ளது.

கடந்த ஆண்டு கோபா அமெரிக்கா கிண்ணத்தை வென்ற ஆர்ஜன்டீனா 35 போட்டிகளில் தோல்வியுறாத அணியாக உள்ளது. அந்த அணி 1986ஆம் ஆண்டு கடைசியாக உலகக் கிண்ணத்தை வென்றது.
 


Add new comment

Or log in with...