அமைச்சர் அலி சப்ரி ட்விட்டர் ஊடாக நேரலையில் பதிலளிக்கிறார்

- இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் முன்னோக்கிய பாதை

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் முன்னோக்கிய பாதை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கலந்துகொள்ளும் நேரடி ட்விட்டர் கலந்துரையாடல் இன்று (10) பி.ப. 12.30 மணி முதல் பி.ப. 01.30 மணி வரை பாராளுமன்ற உத்தியோகபூராவ ட்விட்டர் (@ParliamentLK) கணக்கினூடாக இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான பொதுமக்கள் கேள்விகளை #LKaskMP ஊடாக முன்வைக்க முடியும் என்பதுடன், இன்றைய தினம் நேரடியாக இணைந்து கொண்டும் கேள்விகளை முன்வைக்க முடியும்.

பொதுமக்கள் மைய பாராளுமன்றத்திற்காக மக்கள் பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் நேரடியாக தொடர்புபடுத்தும் வகையில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த நேரடி ட்விட்டர் கலந்துரையாடல் தொடரை ஏற்பாடு செய்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...