பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் - வர்த்தக அமைச்சருடன் சந்திப்பு

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர், இலங்கை வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெனாண்டோவை நேற்று (03) சந்தித்தார்.

வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வர்த்தக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தான் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட முதலாவது நாடு என்ற வகையில் இலங்கைக்கு பல சாதகமான சலுகைகள் உள்ளதாக சுட்டிக்காட்டிய உயர் ஸ்தானிகர், பாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம், கூட்டு முயற்சிகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் உள்ள தடைகளைத் தீர்ப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.


Add new comment

Or log in with...