அரச அதிகாரிகளின் இலஞ்ச, ஊழல்களை அறிவிக்க அழைக்கவும்: 1905

- அரச நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் அறிவிக்க: 1954

அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான அனைத்து பொதுமக்களின் முறைப்பாடுகளையும் 1905 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.

இன்று (04) உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

அதற்கமைய, மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் அலுவலகங்களில் பணிபுரிவோரின் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பாக 1905 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு முறைப்பாடு தெரிவிக்க முடியுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு சேவையானது சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் கிடைக்கிறது.

இதற்கு மேலதிகமாக பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழுள்ள பதிவாளர் நாயகம் திணைக்களம், ஓய்வூதிய திணைக்களம் போன்ற நிறுவனங்களில் இடம்பெறும் இலஞ்ச ஊழல் முறைகேடுகள் தொடர்பிலும் 1905 எனும் குறித்த இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்கலாம்.

இது தவிர, அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களின் பொதுமக்கள் பிரதிநிதிகள் அல்லது அரச அதிகாரிகள் இலஞ்சம் கோரினால் 1954 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாக தொடர்பு கொண்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...