DFCC வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் சம்பத் வங்கி பிஎல்சி ஆகியவை அங்குரார்ப்பண "Bankers on Bicycles" சைக்கிள் ஓட்ட நிகழ்விற்காக சமீபத்தில் கைகோர்த்து செயல்பட்டுள்ளன. இலங்கையில் முதன்முதலாக இடம்பெற்ற "Bankers on Bicycles" நிகழ்வானது உங்கள் வாழ்க்கை நடைமுறையில் சைக்கிள் ஓட்டுதலை இணைத்து ஒரு நிலைபேற்றியல் கொண்ட வாழ்க்கை முறையை மேம்படுத்த முயல்கிறது. இது மாதாந்தம் இடம்பெறும் ஒரு நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதில் பங்கேற்கின்ற ஒவ்வொரு வங்கியும் சுழற்சி அடிப்படையில் செயல்பாடுகளுக்கு பொறுப்பு வகிக்கவுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி காலை 6 மணிக்கு கொழும்பு 03 இல் உள்ள DFCC வங்கியின் தலைமை அலுவலகத்தில் அங்குரார்ப்பண சைக்கிள் சவாரி ஆரம்பமானது. இதில் பங்குபற்றிய நான்கு வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 150 க்கும் மேற்பட்ட வங்கியாளர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்றவர்களில் நான்கு வங்கிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து பணி நிலை ஊழியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு வகையான சைக்கிள் ஓட்டுநர்கள் உள்ளடங்கியிருந்ததுடன், நிகழ்வு அனைத்து ஊழியர்களும் பங்கேற்கும் வகையில் அமையப்பெற்றது. இம்முறை, சைக்கிள் ஓட்டுபவர்களை தெஹிவளைக்கு அழைத்துச் சென்று திரும்பும் நகர சுற்றுவட்டத்தை "Bankers on Bicycles" நிகழ்வு ஒழுங்கமைத்திருந்தது.
இந்த முயற்சி குறித்து DFCC வங்கியின் அன்றாட வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறைப் பிரிவுக்கான சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “2020 ஆம் ஆண்டு எங்களின் 65 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் போது சைக்கிள் ஓட்டுதலை ஒரு வாழ்க்கைமுறை தெரிவாக நாம் அறிமுகப்படுத்தியிருந்தோம். அதன்பிறகு, நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு சைக்கிள் ஓட்டும் நாட்களை வழக்கமாக ஏற்பாடு செய்து வருகிறோம். குறிப்பாக, ஹோட்டன் பிளேஸிலுள்ள எமது Pinnacle Centre இல் வாடிக்கையாளர்களுக்கும் சைக்கிள் ஓட்டும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். நாட்டில், குறிப்பாக கண்டி மற்றும் குருநாகலில், எமது நிலைபேற்றியல் மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டத்தால் ஈர்க்கப்பட்டு, நிலைபேற்றியல் கொண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த விரும்புகிறோம். சைக்கிள் ஓட்டுதல் அதற்கு பாரிய பங்களிப்பாக இருக்க முடியும். இந்த முயற்சியை விரிவுபடுத்துவதில் தொழில்துறையில் ஒருமித்த சிந்தனை கொண்டவர்களுடன் கூட்டாளராக செயற்பட முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு சிறந்த வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், வங்கித் தொழில்துறையில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் மற்றும் தோழமை உணர்வை வளர்க்கவும் வழிகோலும்,” என்று குறிப்பிட்டார்.
Add new comment