முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு; முதல் கிலோ மீற்றருக்கு ரூ. 120 பின்னர் ரூ. 100

முச்சக்கர வண்டி வாடகை கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழிலாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை ரூ. 120 ஆகவும் இரண்டாவது கிலோமீட்டரிலிருந்து ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் ரூ. 100 ஆக அறவிடவும் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.

தங்களது முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருளை ஒதுக்கீட்டு முறையில் விநியோகிப்பதன் காரணமாக தமது தொழிலை மேற்கொள்வதற்குத் குறித்த எரிபொருள் போதுமானதாக இல்லாமை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்நடவடிக்கையை மேற்கொள்ள தாங்கள் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...