காலிமுகத்திடலில் கரையொதுங்கிய சடலங்கள் தொடர்பில் உரிய விசாரணை அவசியம்

- சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள்

கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் மற்றும் காலிமுகத்திடலில் சடலங்கள் மீட்கப்பட்டமை குறித்து பொலிஸ்மா அதிபர் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் காரணமாக பல தனிநபர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

மேலும் கரையோரப்பகுதிகளில் கரையொதுங்கும் சடலங்கள் குறிப்பாக காலிமுகத்திடலில் கரையொதுங்கிய சடலங்கள் குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சடலங்கள் மீட்கப்பட்டமை குறித்து அதிகாரிகள் எந்த வித விளக்கத்தையும் வெளியிடாததால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...