விடுமுறைகளின்றி பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்

பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் விடுமுறை வழங்காது நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பாடசாலைகளுக்கு அவ்வப்போது விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், கல்வி செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...