அலரி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள தமது போராட்டக் களத்தை அகற்ற போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.
கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் உத்தியோகபூர்வ மாளிகையான அலரி மாளிகைக்கு அருகில், ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட 'நோ டீல் கம' (No Deal Gama) என பெயரிடப்பட்டிருந்த குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை அகற்ற போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, இன்றையதினம் (21) போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர்.
பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, இன்று (21) ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து போராட்டக்கார்கள் குறித்த இடத்தை விட்டு செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்த வேளையில், 'மைனா கோ கம' எனும் பெயரில் குறித்த ஆர்ப்பாட்டக் களம் இயங்கி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment