நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு (23) முதல் புகையிரத கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத கட்டணங்களை ஜூலை 12ஆம் திகதி முதல் திருத்துவது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
பயணிகள் போக்குவரத்து, பெற்றோலிய உற்பத்திகள் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்துக்கான புகையிரத கட்டணங்களை திருத்தம் செய்து, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஆயினும் கடந்த ஜூலை 12ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவிருந்த புகையிரத கட்டண அதிகரிப்பைப தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது நாளை மறுதினம் (23) சனிக்கிழமை முதல் புகையிரத கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவிப்பு...
Add new comment