மேலும் 2 கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தொற்று

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவிருந்த தனஞ்சய டி சில்வா மற்றும் ஜெப்ரி வந்தர்சே ஆகிய வீரர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீரர்கள் கொவிட் விதிமுறைகளுக்கு அமைய, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின்போது கொவிட் தொற்றுக்குள்ளான அஞ்சலோ மெத்திவ்ஸ் தற்போது குணமடைந்துள்ளதோடு, அவர் நாளை இடம்பெறவுள்ள போட்டியில் இணைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு முன்னர் பிரவீன் ஜயவிக்ரமவிற்கும் கொவிட் தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நாளை (08) காலியில் இடம்பெறவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களான துனித் வெல்லாலகே மற்றும் பிரபாத் ஜயசூரிய மற்றும் லக்ஷான் சந்தகனும் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட, பாகிஸ்தான் கிரிக்கட் அணி நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்தது.

குறித்த, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதோடு, இரண்டாவது போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...