மன்னார் தாழ்வுபாடு கடற்கரையிலிருந்து படகு மூலம் இந்தியா செல்ல முயற்சித்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7பேர் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடற்படையினரால் நேற்று முன்தினம் (5) இரவு 9.35மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவு னியா மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்,சிறுவன்,சிறுமி உள்ளடங்களாக 7பேரும் மன்னாரைச் சேர்ந்த 2படகோட்டிகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் குறூப் நிருபர்
Add new comment