பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் அமைச்சர் ஜீ.எல். சந்திப்பு

பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் அண்மையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.  

ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை (CHOGM 22) முன்னிட்டு நடைபெற்ற, இருதரப்பு கூட்டத் தொடரிலே, அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுத் தலைவர்களைச் சந்தித்தார்.    இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளித்தல் மற்றும் பொதுநலவாய நாடுகள் உட்பட பலதரப்பு மன்றங்கள் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்தல், அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.  


Add new comment

Or log in with...